தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் தர்பியா முகாம் சென்ற 16-10-2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கானத்தூர் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.
இதில் காஞ்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், இரு மாவட்டத்திலுள்ள அணைத்து கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "கொள்கை உறுதி" மற்றும் "நிர்வாகம்" ஆகிய தலைப்புகளிலும் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. சையது இப்ராகிம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை" மற்றும் "தாவா பணியின் அவசியம்" ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினர். மேலும் சகோதரர் இ.முஹம்மது அவர்கள் "தொழுகை செய்முறை பயிற்சி" மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை செய்முறை விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment