Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, June 25, 2011

பல்லாவரத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணி சார்பாக 2011 ஆண்டிற்கான 10TH மற்றும் 12TH வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 24 -ஜூன்-2011 அன்று பல்லாவரத்தில் நடந்தது. இதில் பல்லாவரத்தை சார்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 'பயன் தரும் கல்வி எது?' மற்றும் 'கல்வியின் அவசியம்' என்ற தலைப்புகளில் பயான் நடத்தப்பட்டது.

பல்லாவரம் கிளை தலைவர் நிசார் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்புரையளராக மாநில செயலாளர் திருவள்ளூர் யூசுப் அவர்கள் பங்கேற்றார்.

இந்த நிகச்சியின் மூலம் கல்விக்கான முக்கியத்துவத்தையும் ஊக்கவிப்பையும் TNTJ பல்லாவரம் கிளை மக்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!





No comments:

Post a Comment