Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, January 26, 2013

மாங்காடு பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் -


மதசார்பற்ற நாட்டின் ஒற்றுமையை குழைக்கும் வகையில் இறைச்சி வியாபாரத்தை நம்பியுள்ள பல நூறு அடித்தட்டு மக்களுடைய வியாபாரத்தில் வயிற்றில் அடிக்கும் மாங்காடு பேரூராட்சியின் அராஜக போக்கை கண்டித்து ஜனவரி 26 - ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு மாங்காடு பேரூராட்சி அருகில் தமிழக முஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வக்கில்லாமல் வீனாவற்றில் தான்தோன்றிதனமாக அறிவிப்பு செய்யும் மாங்காடு பேரூராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

கண்டன ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளார் E. பாரூக் தனது உரையில் வழக்கத்திற்கு மாறாக தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு (27-01-2013 ஞாயிற்றுக்கிழமை) அன்று கறிக்கடைகள் மற்றும் இதர மாமிசக்கடிகளை திறக்க கூடாது என்றும் மேலும் திறந்தாள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தான்தோன்றிதனமாக அறிவித்த மாங்காடு பேரூராட்சிக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவ்வாறு தீர்வு காணப்படவில்லையெனில் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

போராட்டத்தின் இறுதியில் பட்டூர் கிளை தலைவர் இம்ரான் தனது நன்றியுரையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கும், அனைத்து ஊடக துறை நண்பர்களுக்கும், பாதுகாப்பு அளித்த காவல் துறை நண்பர்களுக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.




















No comments:

Post a Comment