இலக்கை நோக்கி இளைஞனே வா! தொடர் பிரச்சாரத்திற்கான லோகோ :
இலக்கை நோக்கி இளைஞனே வா! தொடர் பிரச்சார நோட்டீஸ் :
நோட்டீஸ் டெக்ஸ்ட் :
இலக்கை நோக்கி இளைஞனே வா
நவம்பர் 10 முதல் டிசம்பர் 31 வரை தொடர் பிரச்சாரம்
மனித வாழ்வில் பல பருவங்கள் உண்டு அதில் குழந்தைப் பருவம் வளரும் பருவமாகும். முதுமைப் பருவம் தேயும் பருவமாகும் . ஒரு மனிதன் உடலும் உள்ளமும் முழுவதுமாக வளர்ந்து நிலைத்தன்மையுடன் இருப்பது இளமைப் பருவத்தில்தான். இந்த இளமைப் பருவத்தில் ஒருவர் நெறியுடன் தன்னைக் கட்டமைத்துக் கொண்டால் அதன் பின் அவனது வாழ்வு நல்வாழ்வாக அமையும். மாறாக நெறிதவறி நடந்து விட்டால் அவன் வாழ்வு துயரம் நிறைந்ததாக மாறிவிடும்.
திசைமாறும் இளைஞர்கள்.
இன்றைய இளைஞர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
♦️போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது
♦️நாகரீகம் என்ற பெயரில் நகைப்பிற்குரிய விதத்தில் நடை உடை பாவணைகளை அமைத்துக் கொள்வது.
♦️சினிமா, ஆபாசம் மற்றும் வீணான காரியங்களில் மூழ்கிக் கிடப்பது.
♦️படிப்பு, வேலை இவற்றில் கவனமின்றி அசட்டையாக இருப்பது.
♦️குடும்பம் மற்றும் சமூக அக்கறையின்றி நடந்து கொள்வது…
.♦️ தீய அரசியல் வாதிகளுக்கு பின்னால் செல்வது.
♦️இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மற்றும் மார்க்க போதனைகளில் கவனமற்று இருப்பது
இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு தங்களின் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.
இலக்கு நோக்கி அழைக்கும் இஸ்லாம்.
ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை முன்னோக்குகின்றார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 2:148
மனிதர்கள் அலட்சியமாக இருந்து விடக் கூடாது
இலட்சியம் நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என்பதை இத்திருமறை வசனம் தெளிவு படுத்துகின்றது. இளைஞர்களின் உள்ளத்தில் நாம் பதிய வைக்க வேண்டிய வசனம் இது.
அல்லாஹ்வின் நிழல் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் தன் நிழலைக் கொண்டு ஏழு நபர்களுக்கு இறைவன் நிழல் அளிப்பான். (அதில் ஒருவர்) இறைவனுக்காக வணக்கங்களில் மூழ்கும் இளைஞன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 660.
வாலிபப் பருவத்திலும் வகையாய் வாழ்ந்து காட்டிய நல்லவர்கள்;
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபியவர்களிடம் (மார்க்கத்தை கற்றுக் கொள்ள) இருபது நாட்கள் தங்கினோம்.
அறிவிப்பவர்: மாலிக் இப்னுல் ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புஹாரி 631
இளைஞராயிருந்த ஹாரிஸா இப்னு சுராகா அவர்கள் பத்ருப் போரில் உயிர்த்தியாகம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புஹாரி: 3982
பத்ருப் போரில் முஆத், முஅவ்வித் ஆகிய இரு இளைஞர்கள் தான் இஸ்லாத்தின் எதிரியான அபூஜஹ்லைக் கொன்றார்கள்.
நூல்: புஹாரி 3988.
குர்ஆனை எழுத்து வடிவில் தொகுக்கும் பொறுப்பை அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். நூல் : புஹாரி 4679.
இவ்வாறு இவர்கள் இளமைப் பருவத்தில் சிறப்பான முறையில் தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்க நம் இளைஞர்களோ நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல் தவறான விஷயங்களிலும் , கலாச்சாரச் சீரழிவிலும் சிக்கித் தவிக்கிறார்கள்.
வீண் வழி செல்லும் இளைஞர்களை தீன் வழி நோக்கி அழைப்போம்.
மார்க்க மற்றும் சமூக அக்கறையுடன் வார்த்தெடுக்கப்பட வேண்டிய இளைஞர்கள் வீணான காரியங்களில் ஈடுபட்டு தங்களின் வாழ்வை தொலைத்து வருகின்றனர். இவர்களை சரியான பாதையை நோக்கி அழைத்து அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலக்கை நோக்கி இளைஞனே வா. என்ற செயல் திட்டத்தை நவம்பர் 10 முதல் டிசம்பர் 31 வரை வீரியமிக்க பிரச்சாரமாக செய்ய இருக்கின்றோம். (இன்ஷா அல்லாஹ்) அது சமயம் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.
அல்குர்ஆன் 5 : 2
No comments:
Post a Comment