Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, July 17, 2011

பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக 16 ஜூலை 2011 சனிக்கிழமை அன்று ஷபே பராஅத் பித்அத்தை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் அப்துர் ரஹீம் தலைமை உரைக்குப்பின் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் சகோ.யூசுப் அவர்களும் இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோ.ஜமால் உஸ்மானி அவர்களும் சிறப்புரையாற்றினர்.


Saturday, July 16, 2011

தாம்பரத்தில் மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 15-07-2011 வெள்ளிக்கிழமை அன்று மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Monday, July 11, 2011

தாம்பரத்தில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 10-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் சண்முகம் சாலையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் சகோ.பி.ஜைனுலாபிதீன் அவர்கள் சமரசமில்லா சத்திய கொள்கை என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் யூசுஃப் அவர்கள் இயக்கங்களின் பெயரால் ஏமாறாதீர்கள் என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் லத்தீஃப் ஃபிர்தௌசி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் இதில் மாநாட்டை போல் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!








Saturday, July 9, 2011

தாம்பரத்தில் கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற ஜூலை 08 ஆம் தேதி நிகாலா பாத்திமா என்ற ஏழை மாணவிக்கு பதினொன்றாம் வகுப்பிற்கான கட்டணமான ரூபாய் 11840/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.


Friday, July 8, 2011

தாம்பரத்தில் மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 07-07-2011 வியாழக்கிழமை அன்று மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தாம்பரத்தில் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற ஜூலை 07 ஆம் தேதி தாம்பரம் வள்ளுவர் குருகுலத்தில் பயிலும் ரிபானா என்ற ஏழை மாணவிக்கு ஒன்பதாவது வகுப்பிற்கான கட்டணமான ரூபாய் 8230/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.


Wednesday, July 6, 2011

தாம்பரத்தில் கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற ஜூலை 05 ஆம் தேதி தாம்பரம் வள்ளுவர் குருகுலத்தில் பயிலும் சாஜிதா பானு என்ற ஏழை மாணவிக்கு ஒன்பதாவது வகுப்பிற்கான கட்டணமான ரூபாய் 8230/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.