தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளையின் சார்பாக ரூபாய் எழுபத்தி ஏழாயிரத்துக்கும் மேல் ஜகாத் விநியோகம் செய்யப்பட்டது.
ஆலந்தூர் மர்கஸில் மாநில பொதுசெயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறப்புரைக்குப்பின் நமது மாநில தலைமையால் நடத்தப்படும் அனாதை மற்றும் முதியோர் இல்லதுக்கு ஜகாத் தொகையாக 60,000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கொடுக்கப்பட்டது .
மேலும் ரூபாய் 17,000 தொகையை அனாதைகள், முதியோர்கள், மற்றும் விதவைகள் போன்ற 31 நபர்களுக்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் இன்னொரு நபருக்கு 1500 ரூபாய் மற்றும் மீதம் உள்ள 29 நபர்களுக்கும் தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது.