Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, September 2, 2012
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் இஸ்லாமும் நகைச்சுவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் அருகில் நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 45க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் ரூபாய் 14,500/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரூபாய் 14,500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள K.K. நகரை சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் அவர்களுக்காக அவரின் மச்சானிடம் வழங்கப்பட்டது.
Friday, August 31, 2012
தாவாவில் புதிய யுக்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாவா வில் புதிய யுக்தியை கையாண்டு "No Parking" போர்டில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை பிரின்ட் செய்து மாவட்டத்திலுள்ள கிளைகளுக்கு விநியோகம் செய்து மாவட்டத்தின் அணைத்து பகுதிகளிலும் வீடுகள் தோறும் வாசலில் மாட்டப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் !!
ஆலந்தூர் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
பல்லாவரம் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
புதுப் பெருங்களத்தூர் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
தாம்பரம் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
குன்றத்தூர் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
குரோம்பேட்டை பகுதியில் எடுக்கப்பட்ட படம்
ஜமீன் பல்லாவரம் பகுதியில் எடுக்கப்பட்ட படம்
Tuesday, August 28, 2012
குரோம்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28-08-2012 செவ்வாய்க்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரியின் கையில் கட்டி இருந்த கயரும் ஷிர்க்கு தான் என்று விளக்கி அவராகவே தன கையில் கட்டி இருந்த கையிற்றை வெட்டி எறிந்தார். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, August 26, 2012
ஈஸ்வரி நகரில் ரூபாய் 50,000/- நிவாரணப் பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 26-08-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 50,000/- மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
சென்ற 18-08-2012 சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் காஞ்சி மாவட்டம் பல்லாவரம் நகராட்சி 6வது வார்டு ஈஸ்வரி நகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகிவிட்டன (இறைவனின் கிருபையால் உயிரிழப்புகள் ஏதுமில்லை). தீ விபத்தால் பாதிக்கப்பட்டு அச்சத்தில் உறைந்து நின்ற மக்களுக்கு உதவியாக உடனடியாக நமது TNTJ ஈஸ்வரி நகர் கிளை களமிறங்கியது. விரைவாக கலந்தாலோசனை செய்து சம்பவம் நடந்த வீடுகளை புகைப்படம் எடுத்து அரசுத் துறை சார்ந்த தேவைகளுக்காக விநியோகம் செய்துவிட்டு, துண்டு பிரசுரங்கள் தயார் செய்து பெருநாள் தொழுகை நடக்கும் கிளைகளுக்கு சென்று தொழுகை முடிந்தவுடன் திடலில் நிதி திரட்டப்பட்டது. மேலும் பல்லாவரம் ஸ்டேஷன் ரோடு மார்கெட் பகுதியிலும் நிதி வசூல் செய்து திரட்டப்பட்ட மொத்த தொகையான ரூபாய் 50,000/- பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் துணிமணிகள் மற்றும் அரிசி ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடத்தில் இஸ்லாத்தின் மனித நேயத்தையும், TNTJ இயக்கப் பணிகளையும், மறுமையில் இறைவனின் கூலியை மட்டுமே எதிர்பார்த்து இத்தகைய பணிகளை செய்கிறோம் என்பதையும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் நிலோபர் அலி அவர்கள் தெளிவாக விளக்கி உரையாற்றினார்கள். மேலும் அவர்களுக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஈஸ்வரி நகர் பகுதியில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் அவர்கள் யாரும் உதவி செய்யாத நிலையில் முஸ்லிம்களின் இயக்கமாகிய TNTJ சகோதரர்களின் இந்த மனித நேயப் பண்பினை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, August 19, 2012
ஆலந்தூரில் ஃபித்ரா விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக 19-08-2012 அன்று 42,940/- ரூபாய்க்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மொத்தம் 140/- ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் 301 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. 8 குடும்பங்களுக்கு 100/- ரூபாய் வீதம் பணமாக கொடுக்கப்பட்டது.
வரவு கிளை மற்றும் தலைமை மூலம் --> ரூபாய் 42,940/-
செலவு 140 *301 = 42140
8 * 100 = 800
மொத்த செலவு = 42,940/-
Subscribe to:
Posts (Atom)