Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, November 21, 2012
தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-11-2012 புதன்கிழமையன்று தினேஷ் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை செய்யது என்று மாற்றிக்கொண்டார்.
மேலும் அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்களின் தொகுப்பு, தொழுகை, மனனம் செய்வோம், இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Tuesday, November 20, 2012
தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற மகேந்திரன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று மகேந்திரன் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை வாசிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, November 18, 2012
க.பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று "மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்" நடைபெற்றது.
இதில் முஹர்ரம் மாதத்தில் நடக்கும் அநாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோதரர் பட்டூர் அப்துர் ரஹீம் அவர்களும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்களும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் நயவஞ்சகன் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
பல்லாவரத்தில் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோ வர்கீஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, November 16, 2012
பல்லாவரம் கிளையின் சமூகப் பனி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-11-2012 வெள்ளிக்கிழமையன்று தமிழக அரசு வழங்கும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்ட அடையாள அட்டையை பம்மல் நகராட்சியில் இருந்து பெற்று பல்லாவரம் நேரு நகரை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
இஸ்லாத்தை தழுவிய சிறுவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 16-11-2012 அன்று அப்பு என்ற 6 வயது சிறுவன் இஸ்லாத்தை தழுவினான்.
அவனுக்கு அபூபக்கர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் தாய்,தந்தை இருவரும் மனபூர்வமாக அச்சிறுவனை சிறுவர் ஆதரவு இல்லத்தில் சேர்க்க ஒப்புகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)