Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 6, 2013

க.பல்லாவரத்தில் இரத்த தான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இம்முகாமில் 114 நபர்கள் குருதிக் கொடையளித்தனர்.

மேலும் இரத்த தானம் அளித்த 70 முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!













Saturday, January 5, 2013

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணியின் சார்பாக சென்ற 05-01-2013 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கவிதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் மாநில மாணவரணி பொறுப்பாளர் சகோதரர் அல் அமீன் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!





Friday, January 4, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-01-2013 வெள்ளிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் புகுந்துவிட்ட மாற்றுமத கலாசாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-01-2013 அன்று வண்டலூரை சேர்ந்த சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



தாவா நூல்கள் & CD விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 04-01-2013 ஜும்மாவிற்கு பிறகு கியாமத் நாளின் 10 அடையாளங்கள் என்ற நூல் 30 மற்றும் சகோ பீஜே அவர்கள் உரையாற்றிய இது தான் இஸ்லாம் என்ற CD 40ம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




Thursday, January 3, 2013

ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 03-01-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கழுத்தில் கட்டியிருந்த தாயத்தின் தீமையை விளக்கி அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-01-2013 அன்று வினோத் குமார் என்ற மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் தான் என்று தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!