Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, January 11, 2013

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில்களில் ஏகத்துவ நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் ரபியுல் அவ்வல் மாதம் துவங்குவதால் மவ்லீதின் தீங்குகள் பற்றி அணைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சாந்தி நகர் மற்றும் GST ரோடிலுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில்களில் நூலகம் அமைத்து சுப்ஹான மவ்லீது ஓர் ஆய்வு 400 புத்தகங்கள் இலவசமாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாவாவும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!







Wednesday, January 9, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-01-2013 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆலந்தூர் பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நபியுடன் சுவனத்தில் இருக்க என்ன வழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


Sunday, January 6, 2013

தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது சலீம் MISC அவர்கள் சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பிலும் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள் முஸ்லிம்களின் முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 120 பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 40/- ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


உள்ளரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


பெண்களுக்கான கேள்வி இங்கே? பதில் எங்கே?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக பெண்களுக்கான கேள்வி இங்கே? பதில் எங்கே? என்ற நிகழ்ச்சி மாதமிருமுறை நடைபெற்று வருகிறது.

பதில்கள் தபால் மூலம் பெறப்பட்டு சிறப்பாக பதில் எழுதும் 5 நபர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்து தலா ரூபாய் 150/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ் !!

சென்ற 06-01-2013 அன்று நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சி



பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் இம்மையைவிட மறுமை சிறந்தது என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 15க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 40/- ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!