Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 20, 2013

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற ரகுபதி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் மர்கஸில் 20-01-2013 அன்று ரகுபதி என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் நாசீர் என மாற்றிக்கொண்டார். அவருக்கு தொழுகை, மண்ணறை வாழ்க்கை, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், விலக்கப்பட்ட உணவுகள், துஆக்கள் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



Saturday, January 19, 2013

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணியின் சார்பாக சென்ற 19-01-2013 சனிக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ற தலைப்பிலும் சகோதரர் ஷமீம் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும் மாணவர்களிடையே உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ் !!




Friday, January 18, 2013

திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமையன்று நங்கநல்லூரை சேர்ந்த சகோதரர் நரசிம்மன் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கலில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் நாவை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் ஏகத்துவ நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வாரமும் குரோம்பேட்டை சாந்தி நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் நூலகம் அமைத்து சுப்ஹான மவ்லீது ஓர் ஆய்வு 100 புத்தகங்கள் மற்றும் 20 உணர்வு இதழும் இலவசமாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாவாவும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!









திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஆதம்பாக்கத்தை சேர்ந்த சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


No Parking Board - தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமையன்று புதுப் பெருங்களத்தூர் பகுதியில் திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் அடங்கிய நோ பார்கிங் போர்டு 50 வீடுகளில் பொருத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!