Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, December 6, 2013
இலவச புக் ஸ்டால்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 06-12-2013 வெள்ளிக்கிழமையன்று மடிப்பாக்கம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில் அருகாமையில் ஜும்மாவிற்கு பிறகு புத்தகக் கடை அமைத்து 750 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
நங்கநல்லூர் - தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 06/12/2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மாற்றுமத சகோதரர்களுக்கு தஃவா செய்து மனிதக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் போன்ற 50 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக வெள்ளைக்கலில் சென்ற 06-12-2013 வெள்ளிக்கிழமையன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் நற்குணங்கள் மிகுந்த நபி(ஸல்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 5, 2013
வீட்டுக்கு வீடு தாவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 05-12-2013 வியாழக்கிழமையன்று 15 வீடுகளுக்கு சென்று ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்தும், ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டாம் ஏன்? என்பதை விளக்கியும் தாவா பணிகள் நடந்தது. மேலும், தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் பிட்நோடீஸும், ஜனவரி 28ன் டோர் ஸ்டிக்கரும், குர்ஆன் வசனங்களுடன் கூடிய ஹதீஸ்களுடன் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
புதிய முயற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05-12-2013 வியாழக்கிழமையன்று ஜனவரி 28 போராட்டத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய யுக்தியை கையாண்டு கற்பூரவள்ளி என்ற மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடி தொட்டியில் போராட்ட ஸ்டிக்கரை ஒட்டி அதை 50 வீடுகளுக்கு சென்று 50 செடி தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
2014 காலண்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் 2014 ஆம் ஆண்டிற்கான தினசரி காலெண்டர், 1000 அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. மேலும் இதில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தை பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, December 4, 2013
நங்கநல்லூர் - தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 04/12/2013 புதன்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் கடை மற்றும் வீதிகளுக்கு சென்று தஃவா செய்து 200 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)