Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, September 22, 2012
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 40க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் டிவிடி(3) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் இனைவைப்புக்கு எதிராக பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சகோதரியின் வீட்டில் மாட்டியிருந்த தர்காக்களின் படம் அகற்றப்பட்டது.
பல தர்காக்களின் படங்கள் அடங்கிய அந்த படத்தை மாட்டியிருப்பது இணைவைப்பில் சேரும் என்று தெளிவாக விளக்கியபின் அந்த சகோதரியின் சம்மதத்துடன் படம் கழற்றி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Thursday, September 20, 2012
தாம்பரத்தில் ஆண்களுக்கான சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 20-09-2012 அன்று தாம்பரம் மர்கசில் ஆண்களுக்கான சிறப்பு பயான் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பிலும் சகோதரர் லத்தீப் பிர்தௌசி அவர்கள் "குற்றப்பத்திரிக்கை"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக கேள்விகள் கேட்க்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, September 16, 2012
பல்லாவரத்தில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தொழுகை குறித்த தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் தொழுகை குறித்து உரையாற்றினார்கள். சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் தொழுகை முறை குறித்து உரையாற்றினார்கள். மேலும் தொழுகை முறை செயல் முறை விளக்காமாகவும் அளிக்கப்பட்டது.
Monday, September 10, 2012
மாற்று மதத்தினரையும் கவரும் திருக்குர்ஆன் வசனங்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-09-2012 திங்கட்கிழமையன்று "NO PARKING" போர்டு மாற்று மத சகோதரருக்கு வழங்கப்பட்டது.
விஸ்வபாரதி என்ற மாற்றுமத சகோதரர் "NO PARKING" போர்டிலுள்ள சமூக சீர்திருத்த குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒன்று வேண்டும் என்று ஆவலோடு கேட்டுப் பெற்று சென்றார். அல்ஹம்துலில்லாஹ் !!
விஸ்வபாரதி என்ற மாற்றுமத சகோதரர் "NO PARKING" போர்டிலுள்ள சமூக சீர்திருத்த குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒன்று வேண்டும் என்று ஆவலோடு கேட்டுப் பெற்று சென்றார். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, September 9, 2012
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் ஏகத்துவத்தின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா மற்றும் பர்வீன் ஆலிமா நல்ல நண்பர், தீய நண்பர் என்ற தலைப்பில் உரையாற்றினர். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
Subscribe to:
Posts (Atom)