Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, May 20, 2011

காஞ்சிபுரத்தில் மாபெரும் (தர்ணா) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பட்டூர் கிளையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பான R.D.O வின் மந்தமான விசாரணையை கண்டித்து சென்ற 19-05-2011 வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் நகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் (தர்ணா) தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில் அணைத்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எழுச்சிமுகு கோஷங்கள் எழுப்பினர். மாநில பேச்சாளர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் காவல் துறை அதிகாரிகள் நம்மை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைத்து சென்றனர். பிரச்சனையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து தர உத்தரவு பிறப்பித்தார். அல்ஹம்துலில்லாஹ் !!!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களில் சில :

முடியலையே ! முடியலையே !!
காஞ்சி மாவட்டம் பட்டூரில்
மதுவை விற்க முடிகிறது
வட்டி கடை நடத்த முடிகிறது
வரதட்சணைக்கு எதிராக
கூட்டம் நடத்த முடியலையே !!
கல்வி விழிப்புணர்வை ஆதரித்து
கூட்டம் நடத்த முடியலையே !!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் அன்று
சட்டம் இருக்கு தெரியாதா ?
தீண்டாமைக்கு எதிராக
சட்டம் இருக்கு தெரியாதா ?
முயற்சிக்காதே ! முயற்சிக்காதே !!
குற்றவாளிகளை காப்பாற்ற
முயற்சிக்காதே ! முயற்சிக்காதே !!

காட்டாதே ! காட்டாதே !!
RDO விசாரணையில்
ஆமைவேகம் காட்டாதே !

குரங்கு அப்பம் தின்ன கதை போல
நீதி சொல்ல விசாரணையா ?
RDO விசாரணையா ?
கலைத்திடு கலைத்திடு
உன் தூக்கத்தை கலைத்திடு
முடித்திடு முடித்திடு
RDO விசாரணையை
விரைந்து முடித்திடு

வரதட்சணைக்கு எதிராக
கூட்டம் போட்ட காரணத்தால்
உருட்டுக்கட்டை ஆயுதத்தால்
தாக்கப்பட்டோம் காயப்பட்டோம்
கைது செய்ய மனமில்லை
கடமை செய்ய துணிவில்லை
வேடிக்கை பார்க்கும் காவல்துறையே
இந்திய சட்டத்தின் முன்னாலே
பட்டூர் ஜமாஅத் மட்டும் விதிவிலக்கா
வெட்கக்கேடு வெட்கக்கேடு
உன் காவல்துறைக்கே வெட்கக்கேடு















































பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது:




No comments:

Post a Comment