Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, December 27, 2011
Monday, December 26, 2011
Sunday, December 25, 2011
குன்றத்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜாஹிரா ஆலிமா அவர்கள் தீயபண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, December 24, 2011
Friday, December 23, 2011
Wednesday, December 21, 2011
Monday, December 19, 2011
Sunday, December 18, 2011
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 18/12/11 அன்று பெண்கள் பயான் மற்றும் மதரஸா மாணவ மாணவியருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோதரர் லத்தீப் ஃபிர்தௌசி அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 18/12/11 அன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் பாவமான காரியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு அதில் பதிலளித்த ஒரு பெண்மணிக்கு பரிசாக தீன்குல பெண்மணி ஒரு வருட சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் சிறப்பு பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 18/12/11 அன்று மதரஸா தக்வா(3) மாணவர்களுக்கு வாரந்திர சிறப்பு பயிற்சி வகுப்பு சகோதரர் லத்தீப் ஃபிர்தௌசி அவர்களால் நடத்தப்பட்டது.
இதில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, ஒழுவின் முறை, தொழுகை, நோன்பு, துஆ மனனம் ஆகியவை மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதில் 15 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, December 17, 2011
தாம்பரத்தில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 17/12/11 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதில் அளித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இறுதியாக மதரஸா தக்வா(1) மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 40க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துல்லிலாஹ் !!
Thursday, December 15, 2011
Monday, December 12, 2011
தாம்பரம் கிளையின் இணை வைத்தலுக்கு எதிரான பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம்.
தாம்பரம் கிளையின் நிர்வாகிகள் 11/12/2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு முடிந்து மேலப்பாளையம் சென்ற பொழுது தெரிந்த சகோதரர் ஒருவர் வீட்டில் இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து அந்த வீட்டிலுள்ள தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 11, 2011
ஆலந்தூரில் தீ விபத்து - TNTJ உதவி
ஆலந்தூரில் கடந்த வியாழக்கிழமை (08 /12 /2011) அன்று அதிகாலையில் வ வு சி நகரில் 20 குடிசைகள் தீயில் கருகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை நிர்வாகிகள், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNTJ ஆலந்தூர் கிளையின் சார்பாக 11/12 /2011 அன்று 15 குடும்பங்களுக்கு 1000/- ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)