Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, October 24, 2011

பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2011 ஞாயிற்றுக்கிழமையன்று குர்பானியின் சிறப்பு பற்றி மெகா போனில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


Sunday, October 23, 2011

பல்லாவரத்தில் ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-10-2011 சனிக்கிழைமையன்று மருத்துவ உதவி ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

ஆட்டோவில் விபத்து நடந்து காலில் முறிவு ஏற்பட்டு குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பெங்களூரை சேர்ந்த முஹம்மது ஷரீப் என்பவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

Monday, October 17, 2011

மாவட்ட தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தின் தர்பியா முகாம் சென்ற 16-10-2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கானத்தூர் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

இதில் காஞ்சி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், இரு மாவட்டத்திலுள்ள அணைத்து கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "கொள்கை உறுதி" மற்றும் "நிர்வாகம்" ஆகிய தலைப்புகளிலும் மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. சையது இப்ராகிம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை" மற்றும் "தாவா பணியின் அவசியம்" ஆகிய தலைப்புகளிலும் உரையாற்றினர். மேலும் சகோதரர் இ.முஹம்மது அவர்கள் "தொழுகை செய்முறை பயிற்சி" மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை செய்முறை விளக்கம் அளித்தார்.





Thursday, October 13, 2011

தாம்பரத்தில் ரூபாய் 10000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக மாநில தலைமையிலிருந்து பெறப்பட்ட ஜகாத் தொகை ரூபாய் 10000/- தாம்பரத்தை சேர்ந்த சகோதரி ஷாஹிதா பானு என்பவருக்கு மருத்துவ உதவியாக சென்ற 13/10/2011 அன்று வழங்கப்பட்டது.

தாம்பரத்தில் ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக மாநில தலைமையிலிருந்து பெறப்பட்ட ஜகாத் தொகை ரூபாய் 5000/- தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் இப்ராஹீம் என்பவருக்கு வாழ்வாதார உதவியாக சென்ற 13/10/2011 அன்று வழங்கப்பட்டது.

Monday, October 10, 2011

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக 09/10/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மதரஸதுத் தக்வாவில் சிறப்பு பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மதரஸா மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று, சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கு தஸ்லீமா ஆலிமா அவர்கள் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




தாம்பரத்தில் ரூபாய் 2000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக 09/10/2011 ஞாயிற்றுக்கிழமையன்று சகோ. அப்துல் ஹமீது என்பவரின் மனைவியின் வயிற்றிலுள்ள கட்டியை அகற்றிட மருத்துவ உதவி ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!