Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, November 14, 2011
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 14-11-2011 திங்கட்கிழமையன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்தீப் பிர்தௌஸி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறந்த முறையில் பதிலளித்த சகோதரி ஒருவருக்கு "ஆன்லைன் PJ" என்ற புத்தகம் தாம்பரம் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, November 13, 2011
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 13-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரத்தில் உள்ள லட்சுமி நகர் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஷிஃபா அவர்கள் "இஸ்லாம் ஓர் வாழும் நெறி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, November 12, 2011
பல்லாவரத்தில் தனி நபர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று இந்து சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு, அவர் பைபிளை படித்து வருவதாக சொன்னதால் இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம், கொள்கை விளக்கம் போன்ற 6 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)