Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 4, 2011

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா அவர்கள் மறைவான ஞானம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில்20 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு சகோதரிக்கு தீன்குலபெண்மணி ஒருவருட சந்தா தாம்பரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றுமத சகோதரர் கண்ணாயிரம் என்பவருக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD தாம்பரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாகசென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்திஃப் ஃபிர்தௌஸி அவர்கள் அல்லாஹ்வின் கோபப்பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 50 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு இரண்டு சகோதரிகளுக்கு தீன்குலபெண்மணி ஒருவருட சந்தா தாம்பரம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


புதுப் பெருங்களத்தூரில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஹிஜ்ரி ஆண்டு என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


பல்லாவரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று வீடு வீடாக சென்று தாவா செய்து தீன்குலப் பெண்மணி மற்றும் ஏகத்துவம் மாத இதழ்களுக்கு   தள்ளுபடி விலையில் சந்தாக்கள் சேர்க்கப்பட்டது.

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் அப்துர்ரஹீம் அவர்கள் நடத்தினார்கள்.

ஆலந்தூரில் மதரசா மாணவர்கள் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பயிற்சியளிக்கபட்ட இரண்டு மதரசா மாணவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்கள்.