Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, December 15, 2011
Monday, December 12, 2011
தாம்பரம் கிளையின் இணை வைத்தலுக்கு எதிரான பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம்.
தாம்பரம் கிளையின் நிர்வாகிகள் 11/12/2011 அன்று நெல்லையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு முடிந்து மேலப்பாளையம் சென்ற பொழுது தெரிந்த சகோதரர் ஒருவர் வீட்டில் இணை வைத்தலுக்கு எதிராக பிரச்சாரம் செய்து அந்த வீட்டிலுள்ள தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 11, 2011
ஆலந்தூரில் தீ விபத்து - TNTJ உதவி
ஆலந்தூரில் கடந்த வியாழக்கிழமை (08 /12 /2011) அன்று அதிகாலையில் வ வு சி நகரில் 20 குடிசைகள் தீயில் கருகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலந்தூர் கிளை நிர்வாகிகள், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNTJ ஆலந்தூர் கிளையின் சார்பாக 11/12 /2011 அன்று 15 குடும்பங்களுக்கு 1000/- ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.
Saturday, December 10, 2011
தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா.
கிளை நிர்வாகிகள் 10/12/2011 அன்று நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவிற்கு ரயிலில் வரும் பொழுது மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து இஸ்லாமிய கடவுள் கொள்கை மற்றும் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பிட் நோட்டீஸ்களை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)