Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, February 5, 2012

தாம்பரத்தில் ஃபிப்ரவரி 14 நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் சம்பந்தமான பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தாம்பரம் பகுதியில் வீடு வீடாக சென்று போராட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து அதன் பற்றிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.



Saturday, February 4, 2012

பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையில் சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் வானவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

நங்கநல்லூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

TNTJ நங்கநல்லூர் மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!




பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் அல்லாஹ் ஏறெடுத்து பார்க்காத அந்த எட்டு கூட்டத்தினர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



ஆலந்தூரில் ரூபாய் 7000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று அப்துல்லா சகோதரனுக்கு(தம்பிக்கு) மருத்துவ உதவிக்காக ரூபாய் 7000/- மருத்துவமனைக்கு சென்று கொடுக்கபட்டது.

நங்கநல்லூரில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் நங்கநல்லூர் பகுதியில் 2 இடங்களில் செய்யப்பட்டது.