Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, February 15, 2012
Tuesday, February 14, 2012
முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 14-02-2012 செவ்வாய்க்கிழமையன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் தாம்பரம் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சகோதரர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில செயலாளர் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
இறுதியாக மாவட்ட செயலாளர் சகோதரர் அப்துல் காதர் நன்றியுரையுடன் போராட்டம் நிறைவுற்றது.
Sunday, February 12, 2012
பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் ஏகத்துவத்தின் எழுச்சி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் நூற்றயிம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குன்றத்தூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி சுப்ரியா பானு ஆலிமா அவர்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சகோதரிகளிடம் கேள்விகள் தொடுத்தார். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஷிர்க் என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 75க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அணைத்து சகோதரிகளுக்கும் துஆக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)