Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, July 11, 2012
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-07-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் "மனிதனுக்கு சொந்தமானது எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
Sunday, July 8, 2012
க. பல்லாவரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் "உள்ளத்தை அறிபவன் அல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 40 பெண்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரம் கிளையின் கிராமப்புற தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-07-2012 அன்று மாமல்லபுரம் என்ற ஊரில் கிளை சகோதரர்கள் உண்மை இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களிடத்தில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தனர்.
வழங்கப்பட்ட நோட்டீஸ் விவரம்
பிரபஞ்சம் தோன்றியது எப்படி - 50
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 50
யார் இவர் - 50
வழங்கப்பட்ட DVD மற்றும் புத்தக விவரம்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD -1
இதுதான் இஸ்லாம் புத்தகம் - 1
அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, July 7, 2012
குரோம்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக நடைபெற்ற தாவாவின் மூலம் ஒரு சகோதரரின் கையில் இருந்த கைறு அறுத்து எரியபட்டது. அல்ஹம்துல்லிலாஹ் !!
அரசு கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் விநியோகம் - பல்லாவரம் மாணவர் அணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்து பூர்த்தியும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தில் சமர்ப்பித்து பயன் பெறுமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Thursday, July 5, 2012
க. பல்லாவரத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05-07-2012 அன்று ஷபே பராத் மார்க்கத்தில் உண்டா? என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பொது இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Sunday, July 1, 2012
பல்லாவரத்தில் பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவர் அணியின் சார்பாக சென்ற 01-07-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.
10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியர்களுக்கு பரிசு தொகை மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அணைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்று கணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)