Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, September 9, 2012

தாம்பரத்தில் வாராந்திர பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கஸ்தூரி பாய் நகரில் மதரஸதுத் தக்வா 2 இல் வாராந்திர பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படைக் கல்வி, ஒழுக்கம், துஆ மனனம், குர்ஆன் ஓதுதல் மற்றும் சூராக்கள் மனனம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !

தலைமை கட்டிட நிதி - குரோம்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக தலைமை கட்டிட நிதிக்காக முதல் கட்டமாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டிருந்தது. சென்ற 09-09-2012 அன்று இரண்டாம் கட்டமாக ரூபாய் 7,400/- மாவட்டத்திடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, September 8, 2012

குன்றத்தூரில் ஷிர்கிற்கு எதிராக தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 08-09-2012 சனிக்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Friday, September 7, 2012

தாம்பரத்தில் கேள்வி இங்கே? பதில் எங்கே? - பெண்களுக்கான நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக பெண்களுக்கான கேள்வி இங்கே? பதில் எங்கே? என்ற நிகழ்ச்சி மாதமிருமுறை நடைபெற்று வருகிறது.பதில்கள் தபால் மூலம் பெறப்படுகிறது.சிறப்பாக பதில் எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன

சென்ற 07-09-2012 வெள்ளிக்கிழமையன்று இந்த மாதத்தின் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த மாதத்தின் பரிசு பெற்றவர்கள் விவரம்:
கரீஷ்மா பீவி (வண்டலூர்)
கம்ரூன் பீவி (வண்டலூர்)
ரசீனா பேகம் (கேம்ப் ரோடு)
பரகத் நிஷா) (ரெங்கநாதபுரம்)
ஆயிஷா சித்திக்கா (ரெங்கநாதபுரம்)
சம்சியா பேகம் (ரெங்கநாதபுரம்)
லம்யா(கஸ்துரிபாய் நகர்)

Monday, September 3, 2012

தாம்பரம் கிளையின் 5வது மக்தப் மதரஸா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 03-09-2012 திங்கட்கிழமையன்று தாம்பரம் அருகிலுள்ள நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் மதரஸதுத் தக்ஃவா(5) துவங்கப்பட்டு அன்றிலிருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !!

இதில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இது தாம்பரம் கிளையினால் நடத்தப்படும் ஐந்தாவது மக்தப் மதரஸாவாகும். மேலும் தாம்பரம் சுற்றுப்புறத்திலுள்ள ரங்கநாதபுரம், கஸ்தூரி பாய் நகர், கிருஷ்ணா நகர், மற்றும் லட்சுமி நகர் ஆகிய நான்கு இடங்களில் மதரஸாக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, September 2, 2012

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் இஸ்லாமும் நகைச்சுவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-09-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் அருகில் நடுவீரப்பட்டு என்ற கிராமத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌஸி அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 45க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!