Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, October 16, 2012
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு - ஜமீன் பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-10-2012 செவ்வாய்க்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழ்கங்கப்பட்டது.
குவைத் மண்டலம் வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகத்தை பல்லாவரம் காவல் நிலைய உளவுத்துறையை சேர்ந்த திரு.திவாகர் அவர்களுக்கும் 100 அடி ரோடு செக்போஸ்ட் உதவி ஆய்வாளர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, October 14, 2012
பல்லாவரத்தில் சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 14-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோபர் அலி வாக்குறுதி, ஒப்பந்தம், கடன் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்களும், பெண்களும், திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் விருந்தினர்களை கண்ணியப்படுதுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். மேலும், சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய விதி ஓர் விளக்கம் என்ற நூல் 50 விநியோகிப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, October 13, 2012
புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-10-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
Sunday, October 7, 2012
ஜமீன் பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் தாவாப் பணிகள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் சின்னத்திரையும் சீரழிவும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
மாணவர்களுக்கான சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்களுக்கான சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் ஷமீம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார். பல மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, October 5, 2012
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-10-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் கவ்சர் தடாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்பகுதியில் உள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)