Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, November 30, 2012
ஏழை குடும்பத்திற்கு உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று ஏழை குடும்பம் ஒன்றிற்கு 25kg அரிசி மூட்டை அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
ஷிர்கிற்கு எதிரான தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 ஷிர்கிற்கு எதிரான தீமையை விளக்கி வீட்டில் வைத்திருந்த சந்தானம் பூசப்பட்ட பானை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Monday, November 26, 2012
ஜனாஸா கிளியரன்ஸ்
குவைத்திலிருந்து சென்ற 26-11-2012 திங்கட்கிழமையன்று விமானத்தில் வந்த மாற்று மதத்தை சேர்ந்த சகோதரரின் ஜனாஸாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்லாவரம், கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை நிர்வாகிகள் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து ஜனாஸாவை கிளியரன்ஸ் செய்து எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த அவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, November 25, 2012
சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் திருவொற்றியூர் சாகிர் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பகுதியில் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 குர்பானி மாடு, ஆட்டுத்தோல் விற்ற பணத்தில் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3000/- கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Friday, November 23, 2012
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, November 21, 2012
தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-11-2012 புதன்கிழமையன்று தினேஷ் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை செய்யது என்று மாற்றிக்கொண்டார்.
மேலும் அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்களின் தொகுப்பு, தொழுகை, மனனம் செய்வோம், இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)