Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, November 26, 2012

ஜனாஸா கிளியரன்ஸ்


குவைத்திலிருந்து சென்ற 26-11-2012 திங்கட்கிழமையன்று விமானத்தில் வந்த மாற்று மதத்தை சேர்ந்த சகோதரரின் ஜனாஸாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்லாவரம், கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை நிர்வாகிகள் முறையான ஆவணங்கள் சமர்ப்பித்து ஜனாஸாவை கிளியரன்ஸ் செய்து எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த அவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Sunday, November 25, 2012

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் திருவொற்றியூர் சாகிர் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பகுதியில் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!

ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2012 குர்பானி மாடு, ஆட்டுத்தோல் விற்ற பணத்தில் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3000/- கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !


Friday, November 23, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, November 21, 2012

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-11-2012 புதன்கிழமையன்று தினேஷ் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை செய்யது என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்களின் தொகுப்பு, தொழுகை, மனனம் செய்வோம், இஸ்லாமிய கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Tuesday, November 20, 2012

தாம்பரத்தில் இஸ்லாத்தை ஏற்ற மகேந்திரன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2012 செவ்வாய்க்கிழமையன்று மகேந்திரன் என்ற மாற்று மத சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை வாசிம் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, November 18, 2012

க.பல்லாவரத்தில் தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று "மார்க்க விளக்க தெருமுனை கூட்டம்" நடைபெற்றது.


இதில் முஹர்ரம் மாதத்தில் நடக்கும் அநாச்சாரங்கள் என்ற தலைப்பில் சகோதரர் பட்டூர் அப்துர் ரஹீம் அவர்களும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்களும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!!