Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, January 1, 2013

ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-01-2013 அன்று எலும்பு முறிவு சிகிச்சைக்கு சகோதரர் ஜாபர் என்பவருக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக அவரை நேரில் நலம் விசாரித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


முதியோர் இல்லத்திற்கு உண்டியல் வசூல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 01-01-2013 அன்று தலைமை மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கு கடைகளில் உண்டியல் வைத்து வசூலான தொகை ரூபாய் 2020/- மாநில பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


மாற்றுமத தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01-01-2013 அன்று குடும்பத்துடன் இஸ்லாத்திற்கு வருவதாக கூறிய மாற்றுமத குடும்பத்திற்கு இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !


Sunday, December 30, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் பெண்களின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 40/- ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வண்டலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் ஈமான் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

டோர் ஸ்டிக்கர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 அன்று குழுவாக சென்று தாவா செய்து 22 வீடுகளில் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!








ஷிர்கிற்கு எதிரான குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 அன்று குழுவாக சென்று தாவா செய்ததில் வீட்டில் இருந்த தர்கா போட்டோகளையும், கையில் கட்டியிருந்த தாயத்தையும் அறுத்து எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !