Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, December 11, 2011
Saturday, December 10, 2011
தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் தனி நபர் தாவா.
கிளை நிர்வாகிகள் 10/12/2011 அன்று நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவிற்கு ரயிலில் வரும் பொழுது மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்து இஸ்லாமிய கடவுள் கொள்கை மற்றும் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பிட் நோட்டீஸ்களை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10/12/2011 அன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் நபிமார்களின் வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, December 9, 2011
நங்கநல்லூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் குர்பானி மாட்டுத் தோல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
சென்ற 9/12/2011 வெள்ளிக்கிழமையன்று மன நோயிற்கு சிகிச்சை பெற்றும் வரும் சகோதரி அனுராதாவின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2500/- அவரின் சகோதரர் நரசிம்மன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)