Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, November 30, 2011
பல்லாவரத்தில் ரூபாய் 5000/- மதிப்பில் வீடு சீரமைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளைகளின் சார்பாக சென்ற 30/11/2011 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மதிப்பில் இடிந்து விழுந்த வீட்டை சீரமைத்து தந்தனர்.
பல்லாவரம் மற்றும் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளைகள் இணைந்து மழையின் காரணமாக இடிந்து விழுந்த ஒரு ஏழை சகோதரரின் வீட்டை சீரமைத்து தந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Monday, November 28, 2011
Sunday, November 27, 2011
புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பான முறையில் பதிலளித்த சகோதரிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாற்று மத சகோதரியும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
குன்றத்தூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-11-11 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூர் மர்கஸில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தௌஸி அவர்கள் கலந்து கொண்டு மார்க்க மற்றும் இயக்க சம்பந்தமான அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கமளித்தார். நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
பட்டூரில் தர்பியா முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 27/11/2011 ஞாயிற்றுக்கிழமையன்று பட்டூர் மர்கஸில் கிளை தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) முகாம் நடைபெற்றது.
இதில் மாநில துணை தலைவர் சகோதரர் கோவை ரஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பிலும் தணிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் TNTJ வின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, November 26, 2011
பல்லாவரத்தில் ரூபாய் 6000/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 26/11/2011 சனிக்கிழமையன்று ரூபாய் 6000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாலரை வயது குழந்தை நாகராஜின் மருத்துவ செலவிற்காக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து அவரின் தந்தையிடம் மருத்துவ உதவி வழங்கிவிட்டு, அவருக்கும் மருத்துவமனையிலுள்ள மற்றவர்களுக்கும் தாவா செய்யப்பட்டது.
Thursday, November 24, 2011
Wednesday, November 23, 2011
Tuesday, November 22, 2011
தாம்பரத்தில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 22-11-2011 செவ்வாய்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு வீடு வீடாக சென்று தாவா நடைபெற்றது.
இதில் தாயத்து அணிந்திருந்த சகோதரருக்கு அதன் தீங்கை பற்றி விளக்கி பின்னர் அவருடைய ஒப்புதலின் பேரில் தாயத்து அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Monday, November 21, 2011
பட்டூரில் ரூபாய் 10000/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 21-11-2011 (திங்கட்கிழமை) அன்று பட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஏழை சகோதரரின் மகனுக்கு ரூபாய் 10000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
காது கேட்காத அந்த ஏழை சகோதரருக்கு காது கேட்கும் இயந்திரம் (Hearing Aid) வாங்குவதற்காக தலைமை மூலம் வந்த ஜகாத் தொகையிலிருந்து வழங்கப்பட்டது.
தாம்பரத்தில் திருக்குர்ஆன் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 21-11-2011 திங்கக்கிழமையன்று மாற்று மதத்தை சேர்ந்த சகோதரி விஜி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் கிருஸ்துவ பாதிரியாருடன் நடைபெற்ற நேருக்கு நேர் விவாத DVD க்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை எடுத்துரைத்ததன் விளைவாக சகோதரியே வேண்டிக் கேட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரத்தில் திருக்குர்ஆன் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 21-11-2011 திங்கக்கிழமையன்று மாற்று மதத்தை சேர்ந்த சகோதரி நிர்மா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் கிருஸ்துவ பாதிரியாருடன் நடைபெற்ற நேருக்கு நேர் விவாத DVD க்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை எடுத்துரைத்ததன் விளைவாக சகோதரியே வேண்டிக் கேட்டுகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, November 20, 2011
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 20-11-2011 (ஞாயிற்றுக்கிழமை) முதல் முறையாக பெண்கள் மதரசாவில் பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பெண் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள எராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 20-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-11-2011ஞாயிற்றுக்கிழமையன்று குரோம்பேட்டை சாந்தி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் அபு சுஹைல் அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, November 19, 2011
Subscribe to:
Posts (Atom)