Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, May 15, 2012

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-04-2012 செவ்வாய்க்கிழமையன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.


இதில் மாற்றுமத சகோதரர் சதீஷ் குமார் என்ற சகோதரருக்கு

திருக்குர்ஆன் தமிழாக்கம் - 1
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் டிவிடி - 1
அறிவியல் சான்றுகள் புத்தகம் - 1

ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, May 13, 2012

ஈஸ்வரி நகரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 13-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் சகோதரி ஷிபா ஆலிமா அவர்கள் தொழுகை பயிற்சி அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

நங்கநல்லூரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று நல்லொழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் அபுசுஹைல் அவர்கள் “இஸ்லாமிய பார்வையில் பொறுப்புக்கள்” என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் “நபி வழியில் நம் தொழுகை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 60 பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




Friday, May 11, 2012

குரோம்பேட்டையில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 04-05-2012 மற்றும் 11-05-2012 ஆகிய இரு ஜூம்மாக்களுக்கு பிறகும் குரோம்பேட்டையை சுற்றியுள்ள ஐந்து பள்ளிகளிலும் சமூக பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு என்ற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Tuesday, May 8, 2012

தாம்பரத்தில் பரிசளிப்பு விழா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-05-2012 செவ்வாய்கிழமையன்று கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்பீக் அவர்கள் கலந்து கொண்டு மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களின் கிராஅத், பயான், விளக்க நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பாக பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் முகாமை சிறப்பான முறையில் நடத்திய பொறுப்பாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 138 நபர்களுக்கு ரூபாய் 25,220/- மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, May 7, 2012

தாம்பரத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-04-2012 முதல் 07-05-2012 வரை கோடைக்கால பயிற்சி முகாம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக நடைபெற்றது.

இதில் 67 மாணவர்கள் மற்றும் 63 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, May 6, 2012

படப்பையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-05-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யூசுப் அவர்கள் சஹாபா பெண்களின் வாழ்வும், இன்றைய பெண்களின் நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, May 5, 2012

புதுப் பெருங்களத்தூரில் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05-05-2012 சனிக்கிழமையன்று மதரஸா மாணவர்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

Tuesday, May 1, 2012

பட்டூரில் மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 01-05-2012 செவ்வாய்க்கிழமையன்று பட்டூரின் பல பகுதிகளில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.


இதில் மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் "இறைவன் ஒருவனே" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!!