Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, February 6, 2012

குரோம்பேட்டையில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 6-02-2012 திங்கக்கிழமையன்று 8 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.







பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 வீடு வீடாக சென்று பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-12 திங்கட்கிழமையன்று ஃபிப்ரவரி 14 ஏன்? என்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சம்மந்தமாக துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு மக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!

புதுப் பெருங்களத்தூரில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது.

பெருங்களத்தூர் பகுதியில் 4*2 என்ற சிறிய அளவிலான 24 பேனர்கள் வைக்கப்பட்டது.

Sunday, February 5, 2012

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையில் சென்ற 05-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் நயவஞ்சகர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொதுநலம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி இதழ் பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 05-02-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05-02-12 ஞாயிற்றுக்கிழமையன்று இனைவைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

திரிசூலமலையில் மீலாது நபி கொண்டாட்டத்தில் தர்கா வழிபாடு!! ஈமானுக்கு பெருங்கேடு!! மற்றும் ஈமான் ஊசலடுகிறது? என்ற தலைப்பிலும் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சம்பந்தமாகவும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!