Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, December 19, 2012

ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 19-12-2012 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக சகோதரர் சம்சுதீன் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக அவரின் மகனிடம் வழங்கப்பட்டது.

Tuesday, December 18, 2012

திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18-12-2012 செவ்வாய்க்கிழமையன்று மடிப்பாக்கம் உளவுத்துறையை சார்ந்த தவலிங்கம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 16, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் தாங்கள் அப்துல்லா அவர்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 90 நபர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


வாராந்திர ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாசின் அவர்கள் கியாமத் நாள் மற்றும் 21 டிசம்பர் 2012ல் உலகம் அழியுமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்பகுதியில் உள்ள சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மதரஸா சிறப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 காலை 10 முதல் 2 மணி வரை மதரஸா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதரஸா பிள்ளைகள் பங்கேற்று அவர்களது மார்க்க படிப்பை வெளிபடுத்தினார். இதில் பிள்ளைகளின் சிறிய பயான், ஷிர்க்கிற்கு எதிராக நாடகங்கள் மற்றும் துவா சொல்வது போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றது. இறுதியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் சகோதரர் சித்திக் அவர்கள் "பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!








பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகரில் (மேற்கு) பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஹப்ஸா ஆலிமா அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்குதலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள்மரணத்திற்கு முன், மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 75 உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!