Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 13, 2013

மவ்லூதுக்கு எதிராக வீடு வீடாக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு
மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று மவ்லூதுக்கு எதிராக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து 35 வீடுகளுக்கு மவ்லூது ஓர் ஆய்வு என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 சனிக்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் - துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று புதுப் பெருங்களத்தூர் பகுதியில் மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்பில் 200 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



Saturday, January 12, 2013

ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-01-2013 சனிக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜியாவுர்ரஹ்மான் அவர்கள் உஹது போரில் நமக்குள்ள படிப்பினைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


Friday, January 11, 2013

ரூபாய் 4400/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஏழை சகோதரருக்கு டயாலிசிஸ் செய்வதற்காக ரூபாய் 4400/- மருத்துவ உதவியாக அவரின் மனைவியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில்களில் ஏகத்துவ நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் ரபியுல் அவ்வல் மாதம் துவங்குவதால் மவ்லீதின் தீங்குகள் பற்றி அணைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சாந்தி நகர் மற்றும் GST ரோடிலுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில்களில் நூலகம் அமைத்து சுப்ஹான மவ்லீது ஓர் ஆய்வு 400 புத்தகங்கள் இலவசமாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாவாவும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!







Wednesday, January 9, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-01-2013 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆலந்தூர் பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நபியுடன் சுவனத்தில் இருக்க என்ன வழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!