Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, November 30, 2013

புத்தகம் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 30-11-2013 சனிக்கிழமையன்று இஸ்லாத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் சென்று தஃவா செய்து 100 இஸ்லாமிய திருமணம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பையில் இஸ்லாத்தை ஏற்ற முருகன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் 30/11/2013 சனிக்கிழமையன்று முருகன் என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஸ்தஃபா என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, November 29, 2013

பெண்கள் பயான் - வெள்ளைக்கல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் நடுங்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/11/13 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வுடைய உதவியில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

DVD அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு தஃவா பணி செய்து தர்காக்களில் நடக்கும் உண்மை சம்பவம் என்ற DVD அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 5000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

இதை ஏழை சகோதரி ரஹ்மத் பாத்திமா என்கிற B.E படிக்கும் மாணவிக்கு கல்வி செலவிற்காக அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மருத்துவ முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 29-11-2013 வெள்ளிக்கிழமையன்று காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை கண்டறிய இலவச மருத்துவ முகாம் அர்ரஹ்மான் பெண்கள் அரபிக் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் 200 சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு 200 நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் என்ற புத்தகமும், 25 உணர்வு இதழும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!