Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, April 18, 2014

மாணவர்கள் கருத்தரங்கம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 18-04-2014 வெள்ளிகிழமையன்று மாணவர்கள் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் அல்அமீன் அவர்கள் மற்றும் சகோதரர் ஹுசைன் அலி அவர்கள் சலபி கொள்கை தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 15 மாணவர்கள் பங்கு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18/04/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் கோவிலம்பாக்கம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாயத்து அகற்றம் - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 18/04/2014 வெள்ளிக்கிழமையன்று இருவருக்கு அவர்களது ஒப்புதலோடு தாயத்துக்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18-04-2014 வெள்ளிகிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தொழுகை ஒரு நேரம் குறிக்கப்பட்ட கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, April 16, 2014

மாற்று மத தஃவா - ராம் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16/04/2014 புதனன்று ராம் நகரில் இரவு 7 மணியளவில் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து மார்க்க நூல்களும், திருக்குர்'ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 15, 2014

பெண்கள் தஃவா குழு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 15/04/2014 செவ்வாய்கிழமையன்று இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி தஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

Sunday, April 13, 2014

பட்டூர் - வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 13/04/2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாஸீன் அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!