Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, March 5, 2015

நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05-03-2015 வியாழக்கிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் வரதட்சணையை ஒழிப்போம் என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 10,000/- கல்வி உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05/03/2015 வியாழக்கிழமையன்று ஏழை சகோதரிகள் இருவருக்கு ரூபாய் 10,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, March 3, 2015

லெனினுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் லெனின் என்பவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கி அவர் கேட்டுகொண்டதன் பேரில் திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கி, தூய இஸ்லாத்தை விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று பெண்களுக்கு திருக்குர்ஆன் விளக்கம் வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா ஆலிமா அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தேர்வு வழிகாட்டி நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 200 தேர்வு வழிகாட்டி நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 130 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 700 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, March 2, 2015

ஃபஜருக்கு பிறகு குர்'ஆன் வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 02-03-2015 திங்கட்கிழமையன்று பொழிச்சலூரில் தினமும் ஃபஜர் தொழுகைக்கு பிறகு கொள்கை சகோதரர் ஒருவரது வீட்டில் ஆண்களுக்கான குர்'ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சுமார் 10 பேர் கலந்துக் கொண்டு பயனடைகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!