Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, March 10, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 60 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 300 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூர் - கயிறு அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்கிழமையன்று கடையில் பணிபுரியும் மாற்று மத சகோதரி ஒருவருக்கு ஒரு பெண் தாயி வைத்து இஸ்லாத்தை பற்றி விளக்கி தஃவா செய்து, அவரது சந்தேகங்களுக்கு தெளிவு செய்யப்பட்டது. மேலும், இஸ்லாத்தை ஏற்க முயற்சிகள் செய்யும் அப்பெண்ணின் கையில் கட்டியிருந்த கயிர் நீக்கப்பட்டது.

Sunday, March 8, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் அவர்கள் சிந்தித்து செயல்படுவீர்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

₹ 2,500/- கல்வி உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 08-03-2015 புதன்கிழமையன்று ஃபாயிம் என்ற மாணவனுக்கு ₹ 2,500/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம் - ஜமீன் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று புகை மற்றும் மதுவின் கேடுகளை பற்றி விளக்கி மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 11வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 10 தலைப்புகளில் மாற்று மத தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - மாணவர்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பிரத்யேகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பயான் நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 30 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!