Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, August 29, 2011
பட்டூரில் ரமலான் மாத சிறப்புப் பணிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற்றது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
இரவு தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் பயான் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவில், இரவுத் தொழுகை, தொடர் பயான், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் எடுத்த அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் முதல் இடத்தையும் பெண்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
Thursday, August 25, 2011
பல்லாவரத்தில் சிறப்பு சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-8-2011 வியாழக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைமையினால் நடத்தப்படும் முதியோர் ஆதரவு இல்லம், அநாதை இல்லம், ஆண்கள் மற்றும் பெண்கள் தாவா செண்டர் ஆகிய நிறுவனங்களுக்கு நன்கொடை மற்றும் ஜகாத்தாக ரூபாய் 66,500/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, August 13, 2011
ஆலந்தூர் கிளையில் ரூபாய் 77,000/- மேல் ஜகாத் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளையின் சார்பாக ரூபாய் எழுபத்தி ஏழாயிரத்துக்கும் மேல் ஜகாத் விநியோகம் செய்யப்பட்டது.
ஆலந்தூர் மர்கஸில் மாநில பொதுசெயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் சிறப்புரைக்குப்பின் நமது மாநில தலைமையால் நடத்தப்படும் அனாதை மற்றும் முதியோர் இல்லதுக்கு ஜகாத் தொகையாக 60,000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கொடுக்கப்பட்டது .
மேலும் ரூபாய் 17,000 தொகையை அனாதைகள், முதியோர்கள், மற்றும் விதவைகள் போன்ற 31 நபர்களுக்கு ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் இன்னொரு நபருக்கு 1500 ரூபாய் மற்றும் மீதம் உள்ள 29 நபர்களுக்கும் தலா 500 ரூபாய் வழங்கப்பட்டது.
Friday, August 12, 2011
சேலையூரில் TNTJ புதிய கிளை உதயம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்திலுள்ள சேலையூரில் இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்ற 12/08/2011 அன்று TNTJ புதிய கிளை உதயமானது. அல்ஹம்துலில்லாஹ் !!
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் இமாம் கஸாலி 9080144414
செயலாளர் ரஜப்தீன் 9841064263
பொருளாளர் கலிபதுல்லாஹ் 9940611131
துணை தலைவர் ஹபிபுல்லாஹ் 9840100969
துணை செயலாளர் முஹம்மது காஜா 9952984564
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் இமாம் கஸாலி 9080144414
செயலாளர் ரஜப்தீன் 9841064263
பொருளாளர் கலிபதுல்லாஹ் 9940611131
துணை தலைவர் ஹபிபுல்லாஹ் 9840100969
துணை செயலாளர் முஹம்மது காஜா 9952984564
Monday, August 1, 2011
தாம்பரத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 31-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஷிஃபா ஆலிமா அவர்கள் "ரமளானில் பேணுவதும் பேணக்க்கூடாததும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இதில் 40 பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)