தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற்றது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.
இரவு தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் பயான் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவில், இரவுத் தொழுகை, தொடர் பயான், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் எடுத்த அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் முதல் இடத்தையும் பெண்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
No comments:
Post a Comment