Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 9, 2012

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் சிறப்பு பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் யார் முஸ்லிம்? என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் தாங்கள் ரஷித் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Saturday, December 8, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள்மலக்குமார்களின் துவாஎன்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பட்டூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் சுவர்களில் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிக்கிழமையன்று பட்டூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் மூன்று இடங்களில் சுவர்களில் திருக்குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் எழுதப்பட்டது.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் அவன் தூதரை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற தலைப்பில் பட்டூர் பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.


பட்டுரில் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகமாக தற்கொலைகள் காணப்படுவதால் தற்கொலையை தடை செய்யும் இஸ்லாமிய மார்க்கம் என்ற நபிமொழி சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.


மாங்காடு பகுதியில் மாற்று மத சகோதரர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தாவா செய்யும் விதமாக மனித குல வழிகாட்டி மாமானிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் சில என்ற தலைப்பிலும் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன.


அல்ஹம்துலில்லாஹ் !!!

இஸ்லாத்தை ஏற்றவருக்கு புத்தகங்கள் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிகிழமையன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சித்திக் (பழைய பெயர்: சரவணன்) அவர்களுக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், துஆக்களின் தொகுப்பு, தொழுகை, இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, குழந்தை வளர்ப்பு, இஸ்லாமிய திருமணம், வேதம் கொடுக்கப்பட்டவர் யார்? ஆகிய புத்தகங்களும் 3 டிவிடிக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ரூபாய் 3000/- வாழ்வாதார உதவி !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிக்கிழமையன்று உம்சாலிஹா என்ற ஏழை சகோதரிக்கு ரூபாய் 3000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Friday, December 7, 2012

படப்பையில் நபி வழி ஜும்மா ஆரம்பம் !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 07-12-2012 முதல் நபி வழியில் ஜும்மா இனிதே ஆரம்பம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!