Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, January 25, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 25-1-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மெஹர் பானு ஆலிமா அவர்கள் அற்புத சுவர்க்கமும் ஆற்ற வேண்டிய பணிகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Sunday, January 22, 2012

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் பெரியவர்களுக்கு திருக்குர்ஆன் பாடம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மதரஸதுல் இக்லாஸ் பள்ளியில் தினமும் பெரியவர்களுக்கு இஷாவிற்கு பிறகு நடைபெறும் திருக்குர்ஆன் பாடம் கற்று கொடுக்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் ஈமான் என்ற தலைப்பிலும் பின்னர் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்தின் அவசியத்தையும் விளக்கி உரையாற்றினார்கள்.



குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஆலிமா அவர்கள் இந்த உலகம் அற்பமானது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



ஆலந்தூரில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-1-2012 ஞாயிற்றுக்கிழமையன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. இப்ராஹீம் ஷா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்றும் விளக்கினார்.

பட்டூரில் ரூபாய் 8350/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரூபாய் 8350/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் சாத்துவான்சேரியை சேர்ந்த சகோதரர் சம்சுதீன் என்பவரின் 14 வயது மகள் தய்யுபா என்ற சகோதரிக்கு புற்று நோய் சிகிச்சைக்கு பட்டூரில் வசித்து வரும் அவருடைய பெரிய தந்தை சகோ. அப்துல் ரஹ்மான் என்பவரிடம் வழங்கப்பட்டது.