Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, August 30, 2011

தாம்பரத்தில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 50,400/- ரூபாய்க்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்35,400
மாநில தலைமை 15,000
மொத்தம்50,400

ரூபாய் 160/- மதிப்பிலான பொருட்கள் 315 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.



குரோமேட்டையில் ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 15,480/- ரூபாய்க்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

உள்ளூர் வசூல்12,480
மாநில தலைமை3,000
மொத்தம்15,480

ரூபாய் 150/- மதிப்பிலான பொருட்களும் ரூபாய் 80/- இறைச்சிக்காக பணமாகவும் 63 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கடைசியில் வந்து மிச்சமான 990/- ரூபாய் ஏழை சகோதரருக்கு பணமாக வழங்கப்பட்டது.




Monday, August 29, 2011

ஆலந்தூரில் ரமலான் மாத சிறப்புப் பணிகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளை யின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற்றது.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.


ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இப்தார் ஏற்பாடுகள்



ஒற்றைப்படை இரவில் மார்க்க சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் ஆய்வு செய்வதும்.





 ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு



மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கு தலைமை தாங்குவதற்கு கானத்தூர் பஷீர் அவர்கள் கலந்துகொண்டார்கள்.



இரவு தொழுகைக்குப்பின்  தினசரி இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டு அதில் பதிலளித்தோருக்கு மதிப்பெண் அடிப்படையில் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.



ஆலந்தூர் கிளையில் சுவர் அறிவிப்புகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் நகர கிளையின் சார்பாக கடந்த வாரம் ஆலந்தூர் பகுதியில் சுவர் அறிவிப்புகள் செய்யப்பட்டது.






பட்டூரில் ரமலான் மாத சிறப்புப் பணிகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பணிகள் நடைபெற்றது.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டது.




இரவு தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் பயான் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.



ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.




கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவில், இரவுத் தொழுகை, தொடர் பயான், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் எராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அனைவருக்கும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




கேள்வி பதில் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் எடுத்த அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் முதல் இடத்தையும் பெண்கள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.



Thursday, August 25, 2011

பல்லாவரத்தில் சிறப்பு சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-8-2011 வியாழக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைமையினால் நடத்தப்படும் முதியோர் ஆதரவு இல்லம், அநாதை இல்லம், ஆண்கள் மற்றும் பெண்கள் தாவா செண்டர் ஆகிய நிறுவனங்களுக்கு நன்கொடை மற்றும் ஜகாத்தாக ரூபாய் 66,500/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


பட்டூரில் நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் ரமழான் மாதத்தில் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இறையச்சத்துடன் கூடிய உலகக் கல்வி என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டது.