Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 21, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் மனிதன் நன்றி கெட்டவன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குரோம்பேட்டை கிளை பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது.

இதில் கிளையின் வரவு செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் தாவா பணிகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:

தலைவர் P. முஹம்மது இக்பால் 9884595100
செயலாளர் நல்ல முஹம்மது 9841079760
பொருளாளர் V.M. இப்ராஹீம் 9941234386
துணை தலைவர் A. ஃபரீத் அஹ்மத் 9789855729
துணை செயலாளர் M. அம்ஜத் கான் 9884355876
மருத்துவ அணி சுல்தான் 9445724786
வர்த்தகர் அணி A. ஷாஜஹான் 9841476070
மாணவர் அணி M. இர்ஃபான் கான் 9094207583



துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் 21-12-2012 ஜும்மாவிற்கு பிறகு "டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியாது" என்கிற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, December 20, 2012

மனிதநேய பணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-12-2012 அன்று வெளியூரிலிருந்து வந்து வேலை செய்து வந்த சகோதரர் முஸ்தபா அவர்கள் ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடலை சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பிவைகபட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக சென்ற 20-12-2012 அன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக கிட்னி ஃபெயிலியருக்கு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் சித்திக் அவர்களின் மகனின் சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ரூபாய் 10,000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 20-12-2012 வியாழக்கிழமையன்று மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10,000/- அசாருதீன் என்ற சகோதரருக்கு அவரின் MBA பட்டப்படிப்புக்கு கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, December 19, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-12-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆலந்தூர் பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!