Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 21, 2014

பொதுக்கூட்ட போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களும், மாநில பேச்சாளருமான அப்துன் நாசர் அவர்களும் உரையாற்றும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிறன்று மூவரசன்பேட்டை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹிப்சூர் ரஹ்மான் அவர்கள் பிரார்த்தனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் ஜும்ஆவின் வரலாறும், சிறப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21/12/2014 ஞாயிறன்று மாற்று சமய சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று புகை மற்றும் மது தலைப்பில் 40 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் புகை மற்றும் மது சம்மந்த்தமாக நோட்டிஸ் 3000 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 21-12-2014 ஞாயிறன்று 5 வயதிற்கு மேற்பட்ட சகோதரிகளுக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!