Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 30, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கஸ்தூரி பாய் நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் பெண்களின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 40/- ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வண்டலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் ஈமான் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

டோர் ஸ்டிக்கர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 அன்று குழுவாக சென்று தாவா செய்து 22 வீடுகளில் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!








ஷிர்கிற்கு எதிரான குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-12-2012 அன்று குழுவாக சென்று தாவா செய்ததில் வீட்டில் இருந்த தர்கா போட்டோகளையும், கையில் கட்டியிருந்த தாயத்தையும் அறுத்து எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !






Saturday, December 29, 2012

ரூபாய் 1000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29-12-2012 சனிக்கிழமையன்று கோவையை சேர்ந்த சகோதரர் உதயா என்பவருக்கு ரூபாய் 1000/- மருத்துவ உதவியாக TB ஆஸ்பிட்டலில் அவரை நேரில் நலம் விசாரித்து வழங்கப்பட்டது.

மேலும் அவருக்கு தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலும் யார் இவர்? மற்றும் இஸ்லாமிய கடவுள் கொள்கை ஆகிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


Tuesday, December 25, 2012

துண்டுப்பிரசுரம் விநியோகம் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை சார்பாக "இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா" என்ற தலைப்பில் 25-01-2013 அன்று 1000 துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் மீலாது நபி தினத்தன்று பல்லாவரம் அருகில் உள்ள திருசூலம் மலையில் நபிகள்( ஸல் ) அவர்கள் அணிந்த கோட்டு என்று சொல்லி ஒரு ஆடையை கண்ணாடிப் பெட்டியில் வைத்து மக்களை முட்டாளாக்கி பணம் பார்ப்பது மட்டுமல்லாமல் மக்களை நரகத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். இந்த மாபெரும் இணைவைப்பை கண்டித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழகான முறையில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !!!






Sunday, December 23, 2012

ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 23-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-12-2012 அன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சித்தீக் M.Tech அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினர். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!


மாற்றுமத தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு பட்டூர் பகுதிகளில் உள்ள மாற்றுமத நண்பர்களுக்கு கடவுள் யார் ? எனும் தலைப்பில் தாவா செய்யப்பட்டது மற்றும் யார் இவர் ? எனும் துண்டு பிரசுரங்களும் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 23-12-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக சென்ற 23-12-2012 அன்று ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக நாய் கடியால் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் தாஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Friday, December 21, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-12-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் மனிதன் நன்றி கெட்டவன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குரோம்பேட்டை கிளை பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது.

இதில் கிளையின் வரவு செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் தாவா பணிகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:

தலைவர் P. முஹம்மது இக்பால் 9884595100
செயலாளர் நல்ல முஹம்மது 9841079760
பொருளாளர் V.M. இப்ராஹீம் 9941234386
துணை தலைவர் A. ஃபரீத் அஹ்மத் 9789855729
துணை செயலாளர் M. அம்ஜத் கான் 9884355876
மருத்துவ அணி சுல்தான் 9445724786
வர்த்தகர் அணி A. ஷாஜஹான் 9841476070
மாணவர் அணி M. இர்ஃபான் கான் 9094207583



துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் 21-12-2012 ஜும்மாவிற்கு பிறகு "டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியாது" என்கிற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, December 20, 2012

மனிதநேய பணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-12-2012 அன்று வெளியூரிலிருந்து வந்து வேலை செய்து வந்த சகோதரர் முஸ்தபா அவர்கள் ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடலை சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பிவைகபட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக சென்ற 20-12-2012 அன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக கிட்னி ஃபெயிலியருக்கு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் சித்திக் அவர்களின் மகனின் சிகிச்சைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

ரூபாய் 10,000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 20-12-2012 வியாழக்கிழமையன்று மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10,000/- அசாருதீன் என்ற சகோதரருக்கு அவரின் MBA பட்டப்படிப்புக்கு கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, December 19, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-12-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் ஆலந்தூர் பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 19-12-2012 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக சகோதரர் சம்சுதீன் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக அவரின் மகனிடம் வழங்கப்பட்டது.

Tuesday, December 18, 2012

திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 18-12-2012 செவ்வாய்க்கிழமையன்று மடிப்பாக்கம் உளவுத்துறையை சார்ந்த தவலிங்கம் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 16, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் தாங்கள் அப்துல்லா அவர்கள் பிரார்த்தனையின் முக்கியத்துவம்என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 90 நபர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


வாராந்திர ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யாசின் அவர்கள் கியாமத் நாள் மற்றும் 21 டிசம்பர் 2012ல் உலகம் அழியுமா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்பகுதியில் உள்ள சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!




மதரஸா சிறப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 காலை 10 முதல் 2 மணி வரை மதரஸா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதரஸா பிள்ளைகள் பங்கேற்று அவர்களது மார்க்க படிப்பை வெளிபடுத்தினார். இதில் பிள்ளைகளின் சிறிய பயான், ஷிர்க்கிற்கு எதிராக நாடகங்கள் மற்றும் துவா சொல்வது போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றது. இறுதியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் சகோதரர் சித்திக் அவர்கள் "பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!








பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகரில் (மேற்கு) பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஹப்ஸா ஆலிமா அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்குதலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள்மரணத்திற்கு முன், மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 75 உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!