Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, October 1, 2013
மாற்றுமத தஃவா - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக 1/10/2013 செவ்வாய்க்கிழமையன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி கூறி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, September 1, 2013
பெண்கள் தர்பியா முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 01-09-2013 ஞாயிறன்று பெண்கள் தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 58 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Saturday, January 26, 2013
மாங்காடு பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் -
மதசார்பற்ற நாட்டின் ஒற்றுமையை குழைக்கும் வகையில் இறைச்சி வியாபாரத்தை நம்பியுள்ள பல நூறு அடித்தட்டு மக்களுடைய வியாபாரத்தில் வயிற்றில் அடிக்கும் மாங்காடு பேரூராட்சியின் அராஜக போக்கை கண்டித்து ஜனவரி 26 - ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு மாங்காடு பேரூராட்சி அருகில் தமிழக முஸ்லிம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வக்கில்லாமல் வீனாவற்றில் தான்தோன்றிதனமாக அறிவிப்பு செய்யும் மாங்காடு பேரூராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
கண்டன ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளார் E. பாரூக் தனது உரையில் வழக்கத்திற்கு மாறாக தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு (27-01-2013 ஞாயிற்றுக்கிழமை) அன்று கறிக்கடைகள் மற்றும் இதர மாமிசக்கடிகளை திறக்க கூடாது என்றும் மேலும் திறந்தாள் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தான்தோன்றிதனமாக அறிவித்த மாங்காடு பேரூராட்சிக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவ்வாறு தீர்வு காணப்படவில்லையெனில் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
போராட்டத்தின் இறுதியில் பட்டூர் கிளை தலைவர் இம்ரான் தனது நன்றியுரையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கும், அனைத்து ஊடக துறை நண்பர்களுக்கும், பாதுகாப்பு அளித்த காவல் துறை நண்பர்களுக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
Friday, January 25, 2013
சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் நூல் விநியோகம் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 25-01-2013 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு குரோம்பேட்டை சாந்தி நகர், GST ரோடு மற்றும் சஞ்ஜை காந்தி நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில்களில் ஜனாஸா தொழுகை புத்தகங்கள் 500 இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Thursday, January 24, 2013
சுபுஹான மவ்லீது ஓர் ஆய்வு 5000 புத்தகங்கள் இலவசமாக விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் சுபுஹான மவ்லீது ஓர் ஆய்வு 5000 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
ரபியுல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு சென்ற 24-01-2013 வியாழக்கிழமையன்று காலை முதல் மக்ரிப் வரை காஞ்சி மேற்கு மாவட்டத்திலுள்ள அணைத்து பகுதியிலுமுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் வாயில்களிலும் மற்றும் வீடு வீடாகவும் சென்று 5000 புத்தகங்கள் மக்களிடையே இலவசமாக விநியோகம் செய்து பித்அத்திர்க்கு எதிராக தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்ட விபரம்:
தாம்பரம் - 500
ஆலந்தூர் - 500
நங்கநல்லூர் - 500
ஈஸ்வரி நகர் -100
ஜமீன் பல்லாவரம் - 300
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 500
பல்லாவரம் - 300
குன்றத்தூர் - 300
பட்டூர் - 400
படப்பை - 300
சேலையூர் - 400
பெருங்களத்தூர் - 250
குரோம்பேட்டை - 200
கிளை இல்லாத பகுதி - 450
Tuesday, January 22, 2013
துண்டு பிரசுரம் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2013 செவ்வாய்க்கிழமையன்று குன்றத்தூர் பேருந்து நிறுத்தத்தில் யார் இவர்? என்ற துண்டு பிரசுரம் 113 மற்றும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரம் 100 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
தினம் ஒரு திருக்குர்ஆன் வசனம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக ஒவ்வொரு தினமும் ஒரு திருக்குர்ஆன் வசனம் அல்லது நபிமொழி போர்டில் எழுதி ரோட்டில் வைக்கப்படுகிறது.
23-12-2012
27-12-2012
28-12-2012
31-12-2012
02-01-2013
04-01-2013
05-01-2013
06-01-2013
17-01-2013
18-01-2013
19-01-2013
20-01-2013
21-01-2013
22-01-2013
Subscribe to:
Posts (Atom)